காதலே வாழ்க்கையல்ல
💔💔💔💔💔💔💔💔💔💔💔
*காதலே வாழ்க்கையல்ல!*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
💔💔💔💔💔💔💔💔💔💔💔
#காதலே_வாழ்க்கையல்ல
காதல் தோல்வி என்று
மதுக்கடையில் மயங்கி
கடைவீதியல் தூங்கி
கனவில் ஏங்கியது போதும்
எழுந்து வா இளைஞனே!
காதலில் தோற்றால் என்ன
வாழ்க்கையில் ஜெயிக்கலாம்
எழுந்து வா இளைஞனே!
மரணத்தைத் தேடி
நீ ஏன் செல்கிறாய்
மரணமே!
ஒரு நாள்
உன்னைத் தேடி வரும்....
தோற்றவரெல்லாம்
இறப்பதுதான் முடீவென்றால்
இந்த உலகம்
என்றோ அழிந்திருக்கும்...
அணைத்துக் கொண்டு
வாழ்வதுதான் காதல் என்று
நினைத்து விடாதே!
நினைத்துக் கொண்டு
வாழ்வதும் காதல் தான்
பிரசவத்தின் வலிக்கு
பயந்து கொண்டு
நம் தாய் இறந்திருந்தால்
நாம் பிறந்திருக்க முடியுமா?
வலி இல்லாத வாழ்க்கை
வையகத்தில் ஏது?
எதிர்பார்ப்புகள் எல்லாம்
நிறைவேறுவதும் இல்லை..
நிறைவேறியது எல்லாம்
எதிர்பார்த்ததும் இல்லை...
எதுவந்தாலும்
ஏற்றுக்கொள்வதே! சிறந்தது...
மதியால்
விதியை வெல்லலாம் என்றாலும்
இந்த விதி
எல்லாவற்றிக்கும் பொருந்தாது..
சகித்துத்தான் ஆக வேண்டும்
காதல் தோல்வி என்று
கையில் மதுவோடும்...
காதலிக்கவில்லை என்று
கையில் கயிறோடும்...
காதலை மறக்க முடியவில்லை என்று
கையில் சிகரெட்டோடும்
இருந்தது போதும்
எழுந்து வா இளைஞனே!
உனக்காக
ஒரு வசந்தகால வாழ்க்கை
காத்துக்கொண்டிருக்கிறது...
வாழ்வதற்காகத்தான் காதல்...
காதலால் சாதல் வருமென்றால்
இங்கு
காதல் எதற்கு???
*கவிதை ரசிகன்*
💔💔💔💔💔💔💔💔💔💔💔