நான் சுவாச காற்றுக்கு தவிக்கிறேன் இன்று 555

***நான் சுவாச காற்றுக்கு தவிக்கிறேன் இன்று 555 ***
என்னுயிரே...
வாய்க்காலில்
நீ நடந்துவர...
நீரின் சலசலப்பும் உன்
கொலுசின் ஜில்ஜில் ஓசையும்...
தொலைதூரத்தில் இருக்கும்
என் செவிகளில்...
தென்றலில்
ரம்மியமாக கேட்குதடி...
உள்மனது சொல்கிறது
நடைபோடுபவள் நீதான் என்று...
என்னை முழுமையாக
மாற்றியவளும் நீதான்...
என்னை மலராகா மலர
செய்தவளும் நீதான்...
இடைவிடாமல் இருட்டில் இன்று
என்னை அழவைத்தவளும் நீதான்...
நீ இன்றி நான் சுவாச
காற்றுக்கு தவிக்கிறேன் இன்று...
என்மீது அன்பு இருந்தால்
வெளிக்காட்டு என்கிறாய்...
நீ மண்ணில் விழும்
மழைத்துளிகளையும்...
விண்ணில் ஜொலிக்கும்
விண்மீன்களையும்...
கணக்கெடுத்து
எனக்கு சொல்லிவிடு...
நான் உன் மீதான
அன்பை வெளிக்காட்டுகிறேன்...
கொரோனா தொற்றுக்குக்கூட
இன்று மாற்று மருந்து இருக்கிறது...
காதல் நோய்க்கு இன்றுவரை
மாற்று மருந்து இல்லையடி...
அதனால்தான் கேட்கிறேன்
மீண்டும் உன்னிடமே...
நீ என் உயிராய்
இருக்க வருவாயா.....
***முதல்பூ .பெ .மணி .....***