உயிரை உருக வைப்பவள் நீ 555

***உயிரை உருக வைப்பவள் நீ 555 ***
நெஞ்சினிலே...
தினம் கனவில்
நினைத்தாலே வருகிறாய்...
கேட்டதெல்லாம்
தருகிறாய் கனவில்...
நேரில்வரவே மறுக்கிறாய்
பாசம் உனக்கு புரியவில்லையா...
நதியில்
தத்தளிக்கும் இலையும்...
காதலில் கலந்த மனமும்
கரைசேரும்வரை நிம்மதி இல்லை...
என்னோடு பலவித
கதைகளையும்...
சில வலிகளையும்
பேசி சிரித்தவள் நீ...
வெட்கமின்றியும் அச்சமின்றியும்
என்னிடம் உரையாடினாய்...
பிரிவு என்னும்
வார்த்தையை மட்டும்...
முகம் பார்த்து
உச்சரிக்காமலே சென்றுவிட்டாய்...
என் இதயமோ
உடைந்துவிட்டது வலிகளில்...
உன் நினைவால் எனக்கு
விடியாத இரவாகவே செல்கிறது...
என் நிகழ்கால
நாட்கள் எல்லாம்...
என் தேடலில் கிடைத்த உயிர்
நீ என்று நினைத்தேன்...
பிரிவின் உச்சத்தில் உயிரை
உருக வைப்பவள் நீ...
இன்று
உணர்ந்துகொண்டேன் நிலவே.....
***முதல்பூ .பெ .மணி .....***