உன் பார்வையை திருப்பி கொடு 555
*** உன் பார்வையை திருப்பி கொடு 555 ***
அன்பே...
என் நெஞ்சில் விழுந்த உன் நிழல்
இன்னும் மறையவில்லையடி...
தொடர்ந்து
கொண்டே இருக்கிறது...
உன்னிடம் நான்
காதலை கேட்கவில்லை...
உன்னிடம்
கிடைக்காதென்று தெரியும்...
நான் ஏன் உன் விழிகளை
கேட்டு கொண்டு இருக்கிறேன்...
தெரிந்தோ தெரியாமலோ உன்
விழிகள் என்னை பார்த்து இருக்கிறது...
என் மனம் அதை முதலில்
பார்த்து இருக்கிறது...
நீ பார்த்த அந்த பார்வையை
திருப்பி கொடுத்துவிடு...
நீ மறுத்தபோது
நான் சிரித்திருக்கிறேன்...
உன்னில் காதல் ஊறியதா
கேட்காமல் விட்டுவிட்டேன்...
எனக்கு அன்றைய இரவு
பைத்தியமாகவே கழிந்ததடி...
நீ எதிரில்
தென்படும் நேரமெல்லாம்...
ஒதுங்கி நின்று
உனக்கு வழிவிடுகிறேன்...
உன்
வழியில் மட்டுமல்ல...
உன் வாழ்விலும் வரமாட்டேன்
உன் அனுமதியின்றி.....
***முதல்பூ .பெ .மணி.....***

