நீரூற்றாய் ஊரும் உன் நினைவுகள் 555

***நீரூற்றாய் ஊரும் உன் நினைவுகள் 555 ***


என்னழகே...


தோண்ட தோண்ட ஊரும்
மணற்கேணியின் ஊற்றை போல...

உன்னை
நினைக்க நினைக்க...

என்னுள்
நீயும் ஊற்றாய் ஊருகிறாய்...

அகடு முகடு
மேனிகொண்டவள் நீ...

உன் நினைவுகளால் என் இதயபள்ளம்
நிரம்பி வழிவது எப்படி நீ உணர்வாய்...

நட்சத்திரத்தை
பார்க்கும் போதெல்லாம்...

உன் நட்சத்திர பொட்டு
நினைவில் வருதடி...

கண்ணீரை துடைக்க வந்தவள்
நான் என்று சொன்னவள்...

என் இதழ்களில் மிச்சமிருந்த
புன்னகையையும் பறித்துவிட்டாய்...

கண்களால் கண்டு
மௌனத்தால் காதலை உணர்த்தி...

கண்ணீர் வடிக்க மட்டுமே
வாய்த்தது உன் நினைவுகள்...

இளமை ததும்பலில் வருவது
காதல் என்று நீ சொல்கிறாய்...

நானோ முதுமையிலும் இறுதி
துடிப்புவரை தொடர்வது காதல்...

நீ கற்று தந்த காதலை
கைவிட்டுவிட்டாய்...

நான் உன்
நினைவுகளோடு தொடர்கிறேன்...

உன்
நினைவுகளோடு தொடர்வேன்.....


***முதல்பூ .பெ .மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (11-Apr-22, 7:18 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 262

மேலே