யாருக்கும் லாபமில்லை

வாலிப வயதில்
உடலில் சீறிபாயும்
இள ரத்தத்தின் ஓட்டத்தில்
கண்ணெதிரில்
தெரிகின்ற யாவும்
துச்சமாக தான் தெரியும் ..!!

வாலிபம் கடந்த பின்பு
முதுமையில் யாவும்
தெளிவாக புரியும் ..!!

கண்களை இழந்தவன்
வண்ணங்களை
காண்பதற்கு
ஏங்குவதைப்போல்
காலம் கடந்த பின்பு
பிறக்கின்ற ஞானத்தால்
யாருக்கும் லாபமில்லை ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (18-Apr-22, 4:25 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 156

மேலே