வாழ்க்கை
வாழ்க்கை ஒரு புதினம்,
அதை நீ யோசிக்காது,
புரட்டிப் பார்த்து வாசித்தால் புரியும் ரகசியம்;
வாழ்க்கை ஒரு புத்தகம்.
படிக்க படிக்க வரும் பக்குவம்;
வாழ்க்கை ஒரு தத்துவம்,
வாழ்ந்து காட்டினால் தெரியும் அதன் சித்தாந்தம்;
வாழ்க்கை ஒரு துவக்கம்
துவண்டுபோனால் வரும் துக்கம்;
வாக்கை ஒரு ஏக்கம்,
வழி தடுமாறினால் அபத்தம்;
அதில் வரும் ஆபத்தும்;
வாழ்க்கை ஒரு சோகம்,
சுமையாய் நினைத்தால் சுருண்டு படுக்க வைக்கும்;
வாழ்க்கை ஒரு பாடம்,
பழக பழகத் தெரியும் அதன் பாடும்;
வாழ்க்கை என்பது ஓடம்,
கண்ணீர் சிந்தினால் சோகத்தில் முழுகும்;
வாழ்க்கை ஒரு பயணம் ,
பயணிக்கத்தெரிய வில்லை என்றால் மரணம்;
பயந்து சாகின்றவனுக்கு அது ஒரு ரணம்
வாழ்க்கை ஒரு சிகரம்,
சிரமப்படாமல், சறுக்காமல் அடைவது சிரமம்;
தூங்க நினைப்பவனுக்கு; வாழ்க்கை ஒரு தோல்வி;
தாங்க நினைப்பவனுக்கு வேள்வி;
தயங்கி நிற்பவனுக்கு வாழ்க்கை ஒரு கேள்வி,
வாழத்தெரியாதவனுக்கு வாழ்க்கை ஒரு கேளிக்கை குறி;
வாழ்க்கையில் வேண்டாம் ஏமாற்றம்;
வாழ விரும்புவனுக்கு வேண்டும் மாற்றம்;
வாழ்க்கை ஒரு சிலந்தி வலை,
சிக்காமல் இருக்கும் வரை வரும் சுகம்;
சிக்கி விட்டால் வரும் சிரமம்;
வாழ பழகியவனுக்கு, வாழ்க்கை ஒரு அரிச்சுவடு;
பழாகவனுக்கு அது ஒரு பெரும் வடு;
பக்குவபட்டால் வரும், நித்தம் நிம்மதி;
எதையும் இன்றே செய்தால் நன்று;
இன்று ஏன் என்றால் வாழ்வில்
வரும் இடரு;
நேசிக்க ஆள் இல்லாத போதுதான், யோசிக்க தோனும்;
யோசிக்கத் துவங்கும் போது, நேசித்தவர்கள் அருகில் இருப்பது இல்லை;
ஒருதுளி கண்ணீர் ஓராயிரம் கதை சொல்லும்;
புதிய விடியல், புதிய துவக்கம்,
வாழ்க்கை இவ்வளவு தானா என்று சளிக்காதா;
வாழ்க்கை இன்னுமா என்று யோசிக்காதே;
வாழ்க்கை இன்னும் தான் என்று நேசி;
வாழ்வில் படும் கஷ்டத்தை விட,
தவற விட்ட சந்தோசத்தை நினை;
வலியும், வருத்தமும் வறுத்தெடுக்காது,
வசந்த காலத்தை நினைவு படுத்தும் போது, வாழ்க்கையில் மீண்டும் தென்றல் வீசும்;
விழி முழுவதும் வலியை சுமக்காதே;
தாழ்வு மனப்பான்மையை விடு;
தலைக்கனம் வருமுன் தள்ளி சென்று விடு;
தன்னம்பிக்கையை எடு;
உன் நம்பிக்கைக்கு உயிர் கொடு;
உன்னை உயர்த்தும் உன் நம்பிக்கை;
விழுந்து கிடப்பதில் கிடைப்பதில்லை வெற்றி;
விடியும், விடியும் என்று உறங்குவதில் இல்லை வெற்றி;
விழுந்தாலும் எழுந்து விடை தேடுவதில், கிடைக்கும் வெற்றி;
மரணத்தை விட மனதில் ஏற்படும் ரணங்கள், அதிக வலியைத்தரும்;
மனதுக்குள் வேண்டாம் ரணங்கள்;
வாழ்க்கையை சுமை என்று நினைக்காதே;
சுவாரசியம் என்று நினை;
எதிர் பார்த்து ஏமாறுவதை விட,
எதிர்க்க கற்றுக்கொள்;
புரியாத போது வாழ்க்கை சுகப்படுகின்றது;
புரிந்து பிரியும் போது வாழ்க்கை சுமையாகின்றது;
முடியாது என்ற மூட நம்பிக்கையை விடு;
முடியுமா என்ற அவநம்பிக்கையை விரட்டி விடு;
முடிப்பேன் என்ற வைராக்கியத்தை எடு;
முடிவில் உண்டு துவக்கம்;
முடியவில்லை உனது வர்க்கம்;
எரும்பும் எலியும் கூட தேடுவதை நிறுத்துவதில்லை;
எடுத்த காரியத்தை முடித்துவிடு,
எட்டி நிற்பதை விட்டுவிடு;
வாழ்க்கை ஒரு பதியம் தான்;
அது கொடுக்க வேண்டும் உதயம் தான்;
வாழ்க்கை ஒரு பதிப்புத்தான்;
அதை புதுப்பிக்க வேண்டியது நீதான்;
உனக்குள் வேண்டும் துடிப்புத்தான்;
நடிக்கும் வாழ்க்கை நரகம் தான்;
துடிக்கும் வாழ்க்கை துயரம் தான்;
நடிக்காதே துடிக்காதே;
நேர்த்தியாக வாழ நேரத்தை நீ துரத்து;
உன்னை நேரம் துரத்தவேண்டாம்;
வரலாற்றில் இடம் பிடிக்க நினைப்பதை விட,
வாழ்க்கையில் உனக்கென்று ஒரு இடம் பிடி;
வாழ பழகிக்கொள்;
பிறரையும் வாழ விடவும் பழகிக்கொள்;
வாழ்க்கையெனும் வாகனத்தை முறையாக செலுத்து;
உன் வாழ்க்கைப்பயணம் சுகப்படும்;
வாழ்வோம், வாழவைப்போம்.
காலை வணக்கத்தைக் கூறும் அன்பன்
அ. முத்துவேழப்பன்