ஏப்ரல்,22, புவி தினம்,
![](https://eluthu.com/images/loading.gif)
புவி தினம் புகட்டட்டும் புதுப்பாடம்
பூமி உன் புகலிடம்;
புரிந்து நடந்தால் உனக்கு உண்டு நலம்;
பூலோகம் ஒரு உயிர் கூடம்,
பூத்துக்கிடக்குது பல அதிசயம்;
பூலோகம் ஒரு வனம்,
பசுமை தான் அதன் நிறம்;
பாய்ந்தோடும் நதிகளின் பிறப்பிடம்;
பறவைகள் விலங்குகளின் சரணாலயம்;
பூலோகம் ஒரு புது சொர்க்கம்;
பூக்களின் வாசம் மணக்கும்;
பூக்களைத்தேடி வண்டு ஓடும்;
தீம் கனிகளை உண்ட பறவைகள் கூடும்;
காடுகளும் மலைகளும் அதன் பீடம்;
காற்றினை அள்ளி வீசும்;
ஊறும் சுனைகள் பலவாகும்;
உயிர் வாழும் உயிரினங்கள் பல கோடியாகும்;
அலைகள் பிறக்கும் இடம் கடலாகும்;
அடைக்கலம் தந்தது புவியாகும்;
ஆசைகள் பிறப்பது உனது மனமாகும்;
அசிங்கம் படைத்ததும் உனது மனமாகும்;
உன் பேராசையால் அழியப்போவது புவியாகும்;
புவிதான் உன் வாழ்வாதாரம்;
புரிந்து கொண்டால் வாழ்வு சீர்படும்;
இல்லை என்றால்,
புதையப்போவதும் அதில் நீ தான் ஆகும்;
புவிதான் பூமாதேவியடா;
அவள், பொழியும் கருணையும் பெரிதடா;
பசியைப் போக்க உணவு தருவாள்,
உன் மானத்தைப் காக்க உடை தருவாள்;
இருக்க இடம் தருவாள்;
உன் ஜீவனுக்கு சுவாசம் தருவாள்;
உனக்காக எல்லாம் தரும் பூலோகம்,
போர்க்களம் ஆக வேண்டாம்;
புதைந்து போக வேண்டாம் உன் இனம்;
பூமியை சிதைக்காதே;
பூலோகத்தை அழிக்காதே;
போர் செய்யும் இடம் இல்லை புவி;
பொழுது போக்கு கூடமும் இல்லை இந்த பூமி;
போகட்டும் என்று போக,
உனக்கு இல்லை வேறு புகலிடம்;
மலைகளை குடையாதே; மரங்களை வெட்டாதே;
காடு கழனியை அழித்து காசாக்க நினைக்காதே;
நதிகளை தடுக்காதே;
விழுந்த பிறகு விதி என்று கதறாதே;
இயற்கையை எதிர்த்து வாழ முனைந்து விட்டாய்;
இடர்களை சமாளிக்க துணிந்து விட்டாய்;
தொடர்ந்து எல்லாத் தவறுகளையும் செய்துவிட்டாய்;
மாடிமீது மாடி கட்ட துணிந்துவிட்டாய்;
மண்ணைத் திருடி விற்கத் துணிந்து விட்டாய்;
மண்ணில்லாமல் மனிதன் இல்லை;
மரம் செடிகொடிகள் இல்லாமல் சுவாசம் இல்லை;
பேராசையினாலே பேர் இடர்களையும் சுமந்துவிட்டாய்;
இருக்கும் பூமியை அழிக்காதே;
இயற்கை சீற்றத்திற்கு ஆளாகாதே;
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்;
வீதிதோறும் நிழல் தரும் மரம் நடுவோம்;
குழந்தைகள் விளையாட இடம் வைப்போம்;
மாடி வீட்டில் இல்லை உன் சுகம்
மண்குடிசையானாலும்;
மனதில் வேண்டும் சுகம்;
நாகரீக வேட்டையில்,
ஓட்டையானது உன் வாழ்க்கை;
உறிஞ்சிக் குடிக்க பிறந்து விட்டது பல பல கிருமிகளும்;
நீ நீயாக இரு’;
நிதானம் கெட்டுத் திரியாதே;
நிதானத்தை இழந்து விடாதே;
நீ வாழும் பூமியை,
நீயே அழித்துவிடாதே;
நாகரீகங்கள் பல பிறந்து, மறைந்து போன வரலாறு மண்ணில் உண்டு;
நாளை உன் வரலாறும் எழுதப்படும் இடம் இந்த மண்ணில் தான்; மறந்துவிடாதே;
புவியை அழிக்காதே; புதைந்து போக நினைக்காதே;
ஏப்ரல்,22, புவி தினம், புகட்டட்டும் புதுப்பாடம்;
புவியைக்காப்போம், புதைந்து போவதை தடுப்போம்.
அன்பன் . அ; முத்துவேழப்பன்