வேட்டையாடப் போறன்டோய்
என்ன வேட்டைடா? வனத்துறைக்குத் தெரிஞ்சா தூக்கி உள்ள வச்சு சத்துணவு (களி உருண்டை, வேக வைத்த பட்டாணி, வேர்க்கடலை) தின்ன வைப்பாங்கடோய்.
என்னுடைய வேட்டை பணவேட்டை.
எப்பிடி?
விளம்பரங்களைப் பாருடா. ஒரு அறையும் ஒரு இரும்பு பெட்டகமும் போதும்டா. நம்ம ஊரு நெட்டாப்பாக்கம். நகரத்தில கடை. 'நெட்டாஸ்' - 'தங்க நகைகளை விற்று பைநிறைய பணம் பெற'. இது விளம்பரம்.
இதில் எப்பிடி வேட்டை?
சேதாரம் தான் வேட்டை. புது நகை. அவசரத்துக்கு விற்றாலும் சேதாரம் உண்டுடோய். ஒரு நகைக் கடைல ஒப்பந்தம் போட்டு அவுங்கிட்ட விற்றிடலாம்.
அடங்கப்பா. நீ சரியான வேட்டைக்காரன்டோய்.