உங்களுக்காக ஒரு கடிதம் 5
அன்புத் தோழியே,
கதைகள் பழம் பெருமையை பறைசாற்றுகின்றன. அதனால் என்ன பயன்? போப்பா....கதையா வேண்டாம்பா...அதை தெரிந்து நான் என்ன செய்ய போகிறேன்? இப்போ நான் வாழ்க்கையில் நல்லபடி வாழ்வதற்கு வழிவகை என்ன? 'தியரி' வேண்டாம்பா...'ப்ராக்டிகலா' வழி சொல்லுப்பா...என்கின்ற உன் 'மைண்ட் வாய்ஸ்' எனக்கு கேட்கிறது. பொறுமையாய் நான் சொல்வதை கேளேன். எந்த ஒரு கட்டிடமும் பலமாய் அமைவதற்கு அஸ்திவாரம் அவசியம். அதை பள்ளம் நோண்டி ஆழமாய் அமைத்திடல் வேண்டும்.அதன் பின் செங்கல்,மணல்,சிமெண்ட் கொண்டு ஒவொன்றாய்....ஒன்றின் மேல் ஒன்றாய் கட்ட கட்டத்தான் ஒரு கட்டிடம் கட்ட முடியும். அதன் பின் அதை அழகுபடுத்த பெயிண்ட்..இன்டீரியர்ஸ்...மாடுலர் கிச்சன்... ஏசி.... டிவி...ஹோம் தியேட்டர்...தோட்டம்...லான்...கார்...இத்தனையையும் சேர்த்தாக வேண்டும். அப்பொழுதுதான் நாம் மகிழ்ச்சியாய்...நாம் விரும்பியபடி...மற்றவர் போற்றும்படி வாழமுடியும். அதுபோல்தான் பழைய கதைகள்..புராணங்கள்... அதிலிருக்கும் உட்கருத்துக்கள்... பாட்டி சொல்லும் பாட்டி கதைகள் ...பெரியவர்களின் அனுபவ பாடங்கள்.... ஆகியவற்றிலிருக்கும் உண்மைகளை...கருத்துக்களை...தத்துவங்களை..நம் மனமென்னும் மண்ணில் ஆழத்தோண்டி பலமான அஸ்திவாரமாய் அமைத்து பின் உன் அறிவு...இன்றைய உலகில் உன் அனுபவம்...உன் ஆற்றல்...உன் உழைப்பு எனும் செங்கல்,மணல்,சிமெண்ட் கொண்டு நல்ல கட்டிடத்தை கட்டிக்கொள். அதற்கான முதல் படிதான் இது. இப்போது இது மொட்டையாய்த்தான் தெரியும்.கட்டிடம் எழ..எழ..வளர..வளர...அதன் அழகு ...அதன் வலிமை..உங்களை சந்தோஷப்படுத்தும்..உங்களை வாழவைக்கும். உங்களை உயர்த்தும். ஒன்று தெரியுமா பெண்களாகிய நீங்கள்தான் ஒவ்வொரு வீட்டின் அஸ்திவாரம்..கட்டிடம்...அழகு...எல்லாம்.
சரி...இன்றைய பொழுதுக்கு வருவோம். பழைய புராணங்களையும்...இதிகாசங்களையும் கொஞ்சம் தள்ளி வைப்போம்.இன்றைய உலகிலும் ஒவ்வொரு வீட்டிலும் அது பரம ஏழை வீடானாலும் சரி...லண்டன் அரண்மனையானாலும் சரி..பெண்ணுக்கு பெண்தான் எதிரியாய்த்தான் இருக்கிறாள். இதைச் சொல்லி உன்னை நான் கேலி செய்யவில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன்.விலாவரியாக சொல்லத்தேவையில்லை.அதுதான் மீடியாக்களில் தினம்...தினம் ..நாம் பார்க்கிறோம்...படிக்கிறோம்...கேட்கிறோம். யோசித்துப் பார்க்க சொல்கிறேன். ஆமாம்.பெண்கள் மென்மையானவர்கள். பாசமானவர்கள்.ஏமாந்த சோணகிரிகள். ஆனால் மென்மைக்கும் மென்மைக்கும் பொறாமையா? இல்லை,,, பாசத்துக்கும் பாசத்துக்கும் போட்டியா? புரியவில்லை? ஏன் இந்த நிலைமை?அன்றுதான்..படிப்பில்லை...உலக அனுபவமில்லை..பெண் அடிமைபட்டுக் கிடந்தாள். ஜான்சி ராணி...ராணி மங்கம்மா...அவர்கள்கூட எவ்வளவு கஷ்டப்பட்டார்கள். அவர்களை கொடுமை படுத்தியதும் பெண்கள்தானே..நம் தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி படாத பாடா? அவர்கள் போட்டுக்கொடுத்த அஸ்திவாரத்தில்தான் இன்றைய பெண் சமுதாயம் தலைநிமிர்ந்து நிற்கிறது. அது மட்டுமல்ல ராஜாராம் மோகன் ராய், புரட்சிக்கவி கவி பாரதி,பாரதிதாசன், தந்தை பெரியார் போன்ற பெரியோர் போராடி உடைத்தனர் பெண் அடிமை சங்கிலியை.. ஆனாலும் இந்த கொடுமைகளுக்கு காரணம்தான் என்ன? இப்போது நீங்கள் கூட்டை உடைத்துக்கொண்டு விண்வெளியில் சுதந்திரமாய் உயரப்பறக்கும் பறவைகளாகிவிட்டீர்கள். உங்களுக்கு புத்தக ஞானம் மட்டுமல்ல உலக ஞானமும்...வாய்ப்புகளும்...வசதிகளும் பெருகிவிட்டன. இருந்தும் பெண்ணுக்கு பெண்தான்
எதிரியா? கொஞ்சம் யோசியுங்கள். என்னதான் அறிவு வளர்ந்தாலும்...என்னதான் அனுபவங்கள் கிடைத்தாலும் பெண் புத்தி பின் புத்தியென்று சில சம்பவங்கள் நமக்கு காட்டிக்கொடுக்கின்றதுவே.என்ன செய்ய?
இன்னும் தொடரும்