உங்களுக்காக ஒரு கடிதம் 6

அன்புத் தோழியே,
"அம்மா"..... சொல்லும்போதே நமக்குள் ஒரு இன்பம்...ஒரு புன்னகை....ஒரு நம்பிக்கை..தோன்றுகிறதல்லவா? அம்மா தெய்வம்...என் பேவரெட்....என் பிரென்ட்...ச்சோ ஸ்வீட்...என்றெல்லாம் நம் எண்ணத்தில் பூ பூக்கிறதல்லவா? அவளும் பெண்தானே...அவள் மட்டுமில்லை நீ கூட ஒரு நாள் தாயாகப் போகிறவள்தானே! நான் சொல்லப்போவதை உன்னிப்பாய் கவனி. தாய்....அவள் எல்லோருக்கும் தாய்தான். அவளின் அன்பு எல்லோருக்கும் சமம்தானே. பாகுபாடு ஒன்றும் கிடையாது.உண்மைதானே. ஆனால் எனக்கொரு சந்தேகம். தாயை தெய்வமாய் கொண்டாடுகிற பூமி இது.அவளைப்பற்றி தவறேதும் இல்லை தவறி ஏதேனும் கூறிவிட்டால் கூட அவ்வளவுதான். உலகமே பொங்கி எழுந்துவிடும். கஷ்டம்தான். ஆனால் என் மனதில் உருத்திக்கொண்டிருக்கும் இதை சொல்லாவிட்டால் எனக்குத்தான் மன அழுத்தம் கூடிப்போகும். அம்மா தெய்வம்தான்... அன்பின் மொத்த உருவம்தான்.எந்தவித மாற்று கருத்தும் இல்லை. அம்மா அம்மாவாய் இருக்கும்வரை தெய்வம்தான்.அதே அம்மா...அதே பெண் மாமியாராய்... நாத்தனாராய்...மாறும்போது ஏன் மொத்த சீனுமே மாறிப்போய்விடுகிறதே! அதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்களாவது நான் சொல்லவருவதை புரிந்துகொண்டு...யோசித்து ஒரு மாற்றத்தை கொண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன். தன் மக்களை ....மகளை தங்கத்தட்டில் வைத்து தாங்கும் அதே தாய்...தன் மகனையே நம்பி...அவன் குடும்பத்தையே நம்பி...பெத்த அம்மா அப்பாவை கூடப்பிறந்த உடன்பிறப்புகளை...சொந்த பந்தங்களை...உற்ற தோழிகளை...அப்படியே உதறிவிட்டு ....அவன் கட்டிய மூன்று முடிச்சுகளை முழுதாய் நம்பி தாலி கட்டினவுடன் தலையை ஆட்டிக்கொண்டு பின்னாடியே வந்துவிட்டாளே. இங்கு வந்தவுடன் அவளுக்கு நடப்பவை என்ன? அந்த அன்புத்தாய்...சகோதரியாய் எண்ணவேண்டிய நாத்தனார் சட்டென மாறிவிடுகிறார்களே? அது ஏன்? எங்கிருந்து வந்தது அந்த ஈகோ...எதற்காக இந்த உரிமை போராட்டம்? இல்லை அதனால் சாதிக்கப் போவதுதான் என்ன? இதனால் ஏதாவது பயன் உண்டா? மனவருத்தங்களும்....தனிமையும்தான்..வாட்டி வதைக்கின்றன. இதுதான் இலக்கியத்தில் சொன்னதுபோல் "தாயும் மனம் திரியும்....."போல. இதில் யாரை குற்றம் சொல்வது? இளையராஜாவின் " உன் குத்தமா? என் குத்தமா? யாரை நான் குத்தம் சொல்ல?" என்ற பாடல்தான் காதில் ஒலிக்கிறது. பழைய அம்மாக்களை விட்டு விடலாம். இப்போ நீங்கள் எவ்வளவு படித்திருக்கிறீர்கள்.? வேலைக்குப்போய் சொந்த சம்பாத்தியத்தில்...சொந்த காலில் நிற்கிறீர்கள்.இருந்தும் இது தொடர் கதை ஆகிறது.சொல்லப்போனால் இன்னும் மோசமான நிலைமைக்கு போய்க்கொண்டிருக்கிறது. உயிரை கொல்வதற்குகூட தயங்குவதில்லை. எங்கே போயிற்று பெண்மை? எங்கே போயிற்று தாய்மை? இந்த பழிவாங்கும் குணம் மாறாதா? இதையெல்லாம் உங்கள் படிப்பு சொல்லித்தர வில்லையா? உங்கள் அனுபவம் சொல்லித்தரவில்லையா? என்னைப்பொறுத்தவரை இது ஒவ்வொரு பெண்ணின் ஜீனில் ஆழப்பதிந்து கிடைக்கும் ஒரு விஷம். உங்களால் களைந்தெடுக்க முடியாதா? முடியும்.அதற்கு முயற்சிதான் வேண்டும். முயற்சிக்க மனமும் வேண்டும். முயற்சிக்க முயலுவதே இல்லை. அதை விரும்புவதும் இல்லை.இந்த பெண்களின் ஈகோவால் தெருவில் நிற்பது ஆணினமே. குடி அதிகரிப்புக்கு இதுவும் ஒரு காரணம்." உன்னை சொல்லி குற்றமில்லை...என்னை சொல்லி குற்றமில்லை..
காலம் செய்த குற்றமடி....கடவுள் செய்த குற்றமடி.." என்றும் "என்னம்மா இப்படி பண்றீங்களேயம்மா " என்றும் பாடிக்கொண்டு "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" ஆரம்பித்து தங்கள் வாழ்வினைத் தொலைத்துவிட்டு அனாதையாய் திரிவது ஆணினமே...தோழிகாள் உரக்க சிந்தியுங்கள்.மாற்றத்தை உருவாக்குங்கள். வாழ்வில் நிம்மதியை கொண்டு வாருங்கள்.
தொடரும்.

எழுதியவர் : (26-Apr-22, 7:48 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 83

மேலே