ஏங்குதே எந்தன் நெஞ்சம்
கடைக்கண் பார்வையாலே
கட்டியிழுக்கும் பெண்ணே/
உந்தன் பெயரை
பூட்டிவைத்திட
காத்திருக்குதடி
எந்தன் நெஞ்சம்/
கொஞ்சம்
சொல்லிவிட்டுச் செல்லேனடி
என் செல்ல மயிலே/
மையிட்ட உந்தன்
இருவிழி கருவிழியின்
கடைக்கண் பார்வையால்/
கரைந்து வந்து சேருதடி
எந்தன் உயிர்
உந்தன் மடிதனிலே/
உன் மடிதனிலே
வந்தமர்ந்த
என் நெஞ்சமதை
பூட்டிவைப்பாயா?
இல்லை
உந்தன் கடைக்கண்
பார்வையாலேயே
கொல்வாயா?
பதில் சொல்லிச் செல்லேனடி
என் கடைக்கண் அழகியே
ஏங்கித் தவிக்குதே
எந்தன் நெஞ்சம்
இவள்
எண்ணங்களின்
எழுத்தழகி
அறூபா அஹ்லா