மீண்டும் ஒரு காதல் கவிதை
💗💗💗💗💗💗💗💗💗💗💗
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
💗💗💗💗💗💗💗💗💗💗💗
சோலைக்குள்
தென்றலைப்
பார்த்திருக்கிறேன்
அட...!
இதென்ன?
சேலைக்குள்
ஓரு தென்றல்.....!
கற்சிலைக்குத்
தங்கம் போட்டதைக்
கண்டிருக்கிறேன்....
தங்கச்சிலைக்கே |
தங்கம் போட்டதை
இன்றுதான்
காண்கிறேன்....!
முகிலால்
மூடியிருக்கும்
நிலாவை
ரசித்திருக்கிறேன்...
ஆனால்
இன்று தான்
முதன் முதலாய்
ரசிக்கிறேன்
முந்தானையால்
மூடியிருக்கும் நிலாவை....!!!
பெண்களின்
வளைக்கரத்தை
பலமுறை வர்ணித்து
வியந்திருக்கிறேன்...
ஆனால்.....
உன் வளையல்
போட்ட க்கரத்தை
வர்ணிக்க
வார்த்தையின்றி
தவித்திருக்கிறேன்...!
பூவை
பெண்கள் சூடி
பார்த்திருக்கிறேன்....
ஆனால்
இன்று
ஒரு பூவே
இன்னொரு பூவை
சூடி கொண்டிருப்பதைக்
கண்டு
மெய்மறந்து இருக்கிறேன்.....!!!
உன்
எளியப் புன்னகையின்
அழகுக்கு முன்னால்
விலைமதிப்புமிக்க
பொன்நகையின்
அழகெல்லாம்
தோற்றுத்தான்
போகின்றதே.....!!!
அவ்வப்போது
சற்று
அசைந்து
கொண்டே இரு...
ஆடாமல்
அசையாமல் நின்றால்
உன்னை கடத்திவிடுவார்கள்
ஐம்பொன்சிலை என்று ...
பட்டுச்சேலை
கட்டும் போது
எல்லாப் பெண்களும்
மகிழ்ச்சி அடைவார்கள்....!
நீ கட்டியப்போதுதான்
அந்தப் பட்டுச்சேலையே!
மகிழ்ச்சி அடைந்திருக்கும்....!
ரசிக்காதக் கண்ணும்
உன்னை ரசிக்குமடி..|
நேசிக்காத மனமும்
உன்னை நேசிக்குமடி....!
*கவிதை ரசிகன*
💗💗💗💗💗💗💗💗💗💗💗