பேணாது ஊன் உண் விழைவார்க்கு உயிரோம்பல் இல்லை – அறநெறிச்சாரம் 104

இன்னிசை வெண்பா

பெண்விழைவார்க் கில்லை பெருந்தூய்மை பேணாதூன்
உண்விழைவார்க் கில்லை உயிரோம்பல் எப்பொழுதும்
மண்விழைவார்க் கில்லை மறமின்மை மாணாது
தம்விழைவார்க் கில்லை தவம் 104

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

பிற மகளிரை விரும்புவாரிடத்து மாசின்மை இல்லை,

அருளை விரும்பாமல் புலாலுண்ணலை விரும்புவாரிடத்து உயிர்களைக் காக்குந் தன்மை இல்லை,

எக்காலத்தும் அயலானது நாட்டினைக் கவர விரும்புவாரிடத்து அறம் இல்லை,

பெருமைக்கு ஏலாத செயல்களைச் செய்து தம்மைக் காக்க விரும்புவாரிடத்துத் தவவொழுக்கம் இல்லை

குறிப்பு:

உண் - உண்ணல் முதனிலைத் தொழிற்பெயர். மறமின்மை - அறம் மறத்தின் எதிரது அறமாதலின்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Apr-22, 9:16 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

சிறந்த கட்டுரைகள்

மேலே