தந்தை மகனுக்கு

தந்தை மகனுக்கு.

உன் மனதால்
உலகை சுற்றிப் பார்!
உண்மை ஒன்று
உனக்கு புரிந்து விடும்.

உண்பதற்கு
உணவு உண்டு,
உடுப்பதற்கு
உடை உண்டு,
உறங்குவதற்கு
இடம் உண்டு,
உயிரை காப்பாற்ற
இடம் விட்டு இடம்
ஓடத் தேவை இல்லை.

"இதற்கு மேல்
உனக்கு என்ன வேண்டும்?"

இதை நீ!
இன்று இரவு
உறங்கச்
செல்ல முதல்,
இறைவனிடம்
உரக்கவே சொல்லி
அழுது விடு.

அடைவாய் மனதில் பெரும் அமைதி!

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (3-May-22, 3:40 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : thanthai maganukku
பார்வை : 63

மேலே