தமிழறிஞர் நூல்கள் பதுக்கப்பட்டதா

நேரிசை ஆசிரியப்பா
ஆயிரமா யிரநூலை அறிஞரும் எழுதிட
அத்தனை இலக்கிய விளக்கங்கள் கண்டோம்
சிலம்புக்கு செல்வனாம் சிவஞானம் அருமை
நெஞ்சை யள்ளும் சொல்லாடல் விளக்கும்
நெகிழா உள்ளம் உதவா சாக்கடைதான்
நூறுக்கும் அதிகமாம் சிவஞ்சானம் எழுதியநூல்
அனைத்தும் ஆய்வு நூல்கள் இன்றுகாணோம்
மறைத்தது மாயமாய் கடந்த நூற்றாண்டின்
இடையில் வாழ்ந்த ஒரேத்தமிழ் அறிஞன்
எங்கு போனதிவர் எழுதிய நூல்கள்
அரசுடமை பெயரிலே பதுக்கியதை
மறுபதிப்பு செய்யா குற்றம் பொறாமையே

உதவாக்கரை ஈ வெ ரா வின் நூல்களை புதுப்பித்து பதிப்பிக்க தின்னுங் கூட்டமிருக்க
உண்மைத் தமிழறிஞர்களின் நூல்களை பதிப்பித்து புதுப்பிக்காதது யாருடைய குற்றம். பொறாமை பிடித்த கழக அரசின் குற்றம்.-- காரணம் அவர்களைத் தவிற மற்றவர்களை யாரும்
புகழக் கூடாது என்கிற குறுகிய பொறாமை நெஞ்சமே.. மற்றவர்களின் நூல்களை விலைகொடுத்து வாங்கி அரசுடமை என்ற பெயரில் முடக்கி விட்ட பொறாமை பிடித்தவர்களை என்ன சொல்வது.
தமிழ் எப்படி யாரால் எதனால் அழிகிறது பாருங்கள். எத்தனை எத்தனை பெரிய தமிழின் வித்தகர்களை வளரவிடாமல் செய்த பாவிகளைப் பாருங்கள். கி வ ஜா எப்படிப்பட்ட மாமேதை அவரைவிடவா இவர்கள் தமிழ் படித்து பேசிவிட்டார்கள். கி வ ஜா பார்ப்பனன் என்று
ஒதுக்கவில்லை. அவர் தமிழில் பேரறிஞர் என்பதேக் காரணம் மாற்றான் எழுதிய வசனங்களை மனப்பாடம் செய்து மேடையில் வாந்தி எடுப்பவனெல்லாய் இன்று பேச்சாளர் அறிவாளி என்றெல்லாம் புகழப்படுகிறார்கள். உண்மையை இனியாவது உணருங்கள் தமிழைப் படியுங்கள்
வளர்க வாழ்க தமிழ்

.....

எழுதியவர் : பழனி ராஜன் (4-May-22, 8:30 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 10

மேலே