🐦🐦🐦 குருவிக் குஞ்சுவை வளர்த்த அணில் குட்டி 🐿️🐿️🐿️
சிறுகதை👇🌺
தலைப்பு
🐦🐦🐦
"குருவிக் குஞ்சுவை வளர்த்த அணில் குட்டி "
🐿️🐿️🐿️
இலை உதிர் காலம் முடிந்து வசந்த காலம் ஆரம்பமாகிறது. அது ஒரு அடர்ந்த இருண்ட காடு. அக்காட்டிற்கு பெரிய பெரிய பறவைகளும் குட்டி குட்டி குருவிகளும் வலத்தசை பயணம் செய்து கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்தன.
பழங்களையும் புழுப் பூச்சிகளையும் உண்டு தன் மகிழ்ச்சியை அதன் மொழியில் கத்தி ஒலி எழுப்பி தெரிவித்தனர், பறவைகள்...
அழகான மரங்களில் அழகு அழகான கூடுகளைக் கட்டி வாழ்ந்தது. இந்தக் காட்டில் அணில் கூட்டமும் உண்டு. அதில், ரெட் என்னும் அழகான ஒரு அணில் குட்டியும் உண்டு.
நமது ரெட் அணில் குட்டி மரங்களில் தாவி தாவி பழங்களைப் பறித்து உண்டு விட்டு, தனது நண்பர்களை பார்க்க (சந்திக்க ) போவது வழக்கம்.
அந்த ரெட் அணில் குட்டி எப்பொழுதும் தரையில் நடந்து போவது பழக்கம் இல்லை. எப்போதும் மரங்களில்த் தாவித்தாவி தான் போகும்.
அப்படித்தான் ஒருநாள் ரெட் அணில் குட்டி, தனது நண்பர்களிடம் சென்று விளையாடி முடித்து விட்டு திரும்பியது.
மரங்களில் தாவி தாவி சென்று கொண்டிருக்கையில், திடீர்னு நமது ரெட் அணில் குட்டிக்கு பசி வந்துவிட்டது...
ஒரு மரத்தின் நின்றது. இந்த மரத்தின் பழங்கள், நுனி கிளைகளில் இருந்தது. பொறுமையாக, பதட்டத்துடன், நுனி கிளைக்கு சென்றது. மணம் வீசும் பூக்களின் நடுவில் நிறையா ருசியான பழங்கள் இருந்தது.
பூக்களின் நடுவில் தலையை நீட்டியது ரெட் அணில் குட்டி. கண் இமைக்கும் நேரத்தில், எப்படி... கண் இமைக்கும் நேரத்தில் வண்ணமயமான ஒரு வண்ணத்துப்பூச்சி நமது ரெட் அணில் குட்டியின் மூக்கின் மீது அமரவே, அதன் அழகில் மயங்கிய நமது ரெட் அணில் குட்டி. நிதானத்தை இழந்து திடீர்னு கீழ்நோக்கி விழுந்துகொண்டிருந்தது. அப்போது ஒரு கிளையில் ஒரு அழகான குட்டி குருவிக்கூடு ஒன்று இருந்தது. அதில் இரண்டு குட்டி முட்டைகள் இருந்தது அதில் தொப்பென விழுந்து. மீண்டும் கீழ் நோக்கி மல்லாக்க விழுந்தது. தனது முகத்திற்கு நேராக வரும் ஒரு குட்டி முட்டையை தன் இரு கைகளால் பட்டுனு பிடித்தது, ரெட் அணில் குட்டி.
அந்த குட்டி முட்டை ஒரு குருவி உடைய முட்டை என்று அறியாமல், இது என்ன பழமா?! இல்ல கல்லா?! என்று புலம்பிக்கொண்டே ரெட் அணில் குட்டி இது ஒரு கல் பழம் (கடினமான பழம்) என்று நினைத்து கடித்து தரையில் புரண்டு விளையாடியது. மல்லாக்கப் படுத்துக் கொண்டு தூக்கி போட்டு விளையாடியது.
சற்று நேரத்திற்கு பிறகு, பசியை மறந்து விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று மனதில் நினைத்து , தனது வீட்டிற்கு சென்றது. அந்தக் குட்டி முட்டையை ஒரு இடத்தில் பத்திரமாக வைத்துவிட்டு தனது வீட்டில் உள்ள பழங்களை சாப்பிட்டது.
ஒரு நாள் வழக்கம்போல் மரங்களின் தாவித்தாவி பழங்களை உண்டுவிட்டு தனக்கு மிகவும் பிடித்த ஆற்று உடையில் இருக்கும் ஈச்சம் பழத்தை சாப்பிட சென்றது. ஈச்சம் பழத்தை பறித்து உண்டுவிட்டு ஒரு மரத்தில் சற்று இளைப்பாறியது.
அந்த மரத்தில் ஒரு குட்டிக் குருவி தனது முட்டைகளை அடக்காக்குவதை பார்த்தது, ரெட் அணில் குட்டி. அது நினைத்தது அன்றொருநாள் என் மீது விழுந்தது குட்டி குருவியின் முட்டையா?! என்று....! ஆச்சரியம் பட்டேப் போயிட்டது.
அன்றிலிருந்து குருவி போல முட்டையை அடைகாத்தது இரவில். சில நேரங்களில் பகலிலும்க்கூட.
சில நாட்களுக்குப் பிறகு...
அந்த குட்டி முட்டை ஆடியது, விரிசல் விட்டது .அதைப்பார்த்த ரெட் அணில் குட்டி பயந்து தனது மரப்பொந்து விட்டு வெளியேறியது. பின்பு உள்ளே எட்டிப்பார்த்தது. முட்டையை உடைத்துவிட்டு அழகான குருவிகுஞ்சு வெளியே வந்தது...
அதற்கு என்னா உணவு கொடுப்பது என்று தெரியவில்லை, ரெட் அணில் குட்டிக்கு. மரத்தில் அமர்ந்து தலையை சொரிந்து கொண்டிருந்தது. அந்த மரத்தில் ஒரு குருவி கூடு இருந்து. அந்தக் குருவி தனது குஞ்சுகளுக்கு புழு பூச்சிகளை பிடித்து வந்து ஊட்டுவதையும் சில நேரங்களில் பழங்களை ஊட்டுவதையும் வேவு பார்த்தது, ரெட் அணில் குட்டி.
புழு பூச்சிகளைப் பிடித்து ஊட்டி வளர்த்தது. புழு பூச்சிகளைப் பிடிக்க ரொம்பவே கஷ்டப்பட்டது. சிலநேரங்களில் ருசியான பழங்களையும் ஊட்டியது குருவிக் குஞ்சுக்கு. கனமழை என்று கூட பார்க்காமல் குருவி குஞ்சுக்கு உணவு ஊட்டி வளர்த்து வந்தது...
(குருவி முட்டை பற்றியும் குட்டிக் குருவி குஞ்சு பற்றியும் தனது அணில் குட்டி நண்பர்களிடம் பேசிக்கொள்ளவில்லை, ரெட் அணில் குட்டி)
சில வாரங்களுக்கு பிறகு...
அப்பாடா! ம்... ஒருவழியாக குருவிக்குஞ்சுக்கு இருக்கைகள் எல்லாம் முளைத்து ஒரு அழகான சின்னஞ்சிறு குருவியாக மாறியச்சு...
அந்த சின்னஞ்சிறு குருவியுடன் விளையாடி மகிழ்ந்தது நமது ரெட் அணில் குட்டி. அதற்க்கு பார்க்க கற்றுக் கொடுத்தது. அந்த இளங்குருவி சிட்டாகப் பறப்பதை பார்த்து ரசித்தது...
ஒருவழியாக கோடைக்காலமும் வந்துவிட்டது...
ஒருநாள் ரெட் அணில் குட்டி சுட்டித்தனமான குட்டி குருவியுடன் ஆற்று ஓடைக்கு சென்றது. அங்கு பறித்த ருசியான ஈச்சம் பழத்தையும் நாவல் பழத்தையும் நாவல் மரத்தில் அமர்ந்து ருசித்துக் கொண்டிருந்தனர். ரெட் அணில் குட்டியும் குட்டி குருவியும்...
இந்த மகிழ்ச்சியான நேரத்தில்... குட்டி குருவியின் இனத்து குருவிகள் கூட்டமாக இணைந்து வலத்தசை பயணம் கொள்வதைப்பார்த்தது, குட்டிக் குருவி...ம்... ரெட் அணில் குட்டி, குருவிக்கு முத்தம் கொடுத்தது... பதிலுக்கு குட்டிக் குருவி தனது சிறகை பிடிங்கி ஞாபகார்த்தமாக கொடுத்துவிட்டு, உல்லாச பயணத்தை மேற்கொண்டது...
குட்டி குருவிக்கு கை அசைத்தவாறு இருந்த நிலையில்... அங்கு தனது நண்பர்கள் வந்தனர். அவர்களுடன் வழக்கம்போல் விளையாடி மகிழ்ந்தான் நமது ரெட் அணில் குட்டி... ம்...
குட்டி எழுத்தாளன்,
வே.சின்னசாமி B.A.Tmail இலக்கியம்
புனைப்பெயர்:
குட்டி சின்னா
.................................