இன்னும் எத்தனை ஏமாற்றமோ-சகி
உன் நினைவிலும்
நானில்லை...
உன் நிஜத்திலும்
நானில்லை....
உன் நினைவும்
கனவும் வேறு
ஒருவளாக இருக்க
பொய்யாக எதற்கு
இந்த இல்லற வாழ்க்கை.....
உன் மனதில்
உண்மையாகவே
நான் இருந்தால்
நிச்சயம் வேறு
ஒருவளின் மீது
உன் மனம் அலைபாயாது .
காதல் என்ற
பெயரில் என்னை
நடைபிணமாக வாழ
சொல்லிக்கொடுத்தாய்...
உன் காதல்
பொய் என்று
தெரிந்து கொண்ட
நிமிடமே என் காதல்
இறந்து விட்டது...
என் காதல்
உனக்கு தேவை இல்லை.
என்று புரிந்து கொண்டு
மனதால் உன்னை
பிரிந்து விட்டேன்....
உடைந்த கண்ணாடி
போலவே...
மலர்ந்து மண்ணில்
மடிந்து போன மலரை
போலவே..
என் காதலும்
நானும் மடிந்து
விட்டோம்....
மனதளவில்
உன்னை விட்டு
என்றுமே விலகியே இருப்பேன்....
என் மரணம்
என்னை தழுவும் வரை...
இனி என்றுமே
உன்னை தொடரவே
போவதில்லை ...