கையளவு இதயம் வெடித்துவிடும் 555
***கையளவு இதயம் வெடித்துவிடும் 555 ***
என்னுயிரே...
உறங்கும் பொழுது
மரணம் தழுவினால்...
உடல் மட்டும் இருக்கும்
உயிர் கலந்துவிடும் காற்றோடு...
என் மூலையில் பதிந்த
உன் நினைவுகள் மட்டும் உருகும்...
அப்போதும்
உன்னை நினைத்து...
சேமித்த நினைவுகள் எல்லாம்
திரவமாக பூமியில் கலக்கும்...
நினைவுகள் அதிகமானால்
கையளவு இதயம் வெடித்துவிடும்...
வெடிக்க காத்திருக்கிறது
என் இதயம் காதலால்...
உன் பாசமழையில்
இத்தனை நாள் நனைந்த நான்...
இன்று உன் மௌனத்தால்
கண்ணீரில் நனைகிறேன்...
நான் சொல்லி இருந்தால்
இருந்திருப்பாயோ நீ என்னுடன்...
முடிவில்லா வானம் போல
தொடரும் என் பயணம் உனக்காக...
கல்லூரி நாட்களை நினைத்து
சொல்லாத காதலால் துடித்து.....
***முதல்பூ .பெ .மணி.....***