முகவரியின்றி தொலைந்துவிட்டேன் 555
***முகவரியின்றி தொலைந்துவிட்டேன் 555 ***
உயிரானவளே...
நீ எங்கு சென்றாயோ
தேடுகிறேன் நான் உன்னை...
துணையாக வந்தவள்
பாதியில் சென்றது ஏனோ...
உனக்குள் நானும்
எனக்குள் நீயும்...
நமக்குள் நாம் ஒன்றாகி உருகி
ஒன்றானது நினைவில்லையோ...
உன்னையும் சுமக்கிறேன்
உன் நினைவுகளையும் சுமக்கிறேன்...
நீ அருகில்
இல்லையென தெரிந்தும்...
உன்னை மனதில் இருந்து
இறக்கி வைக்க மனமில்லை...
எனக்கு முகம்
பார்க்கும் கண்ணாடியாக...
நீ இருக்க
ஆசைகொண்டேன்...
முகவரியின்றி
தொலைந்துவிட்டேன் இன்று...
எனக்கென்று ஒரு உலகம்
அமைத்துக்கொண்டேன்...
உடல் என்னோடு
உயிர் உன்னோடு...
மௌனத்தின் வலி உனக்கு
காலங்கள் உணர்த்தும்...
காத்திருப்பேன் அதுவரை
உனக்காக நானும்.....
***முதல்பூ .பெ .மணி.....***