காற்றில் மிதக்கும் என் ஜீவனே 555

***காற்றில் மிதக்கும் என் ஜீவனே 555 ***


ப்ரியமானவளே...



திருவிழா கூட்டத்தில் என்னை
தேடும் உன் விழிகளுக்கு...

தரிசனம் கொடுக்காமல் உன்னை
தவிக்க விடுவதில் எனக்கு சுகம்...

நீ தேடுவது
எனக்கு அழகு...

கூட்டத்தில்
தவிக்க விட்ட என்னை...

இன்று வாழ்க்கை பயணத்தில்
தவிக்கவிட்டு சென்றுவிட்டாய்...

என்னை துரத்தும்
உன் நினைவுகளில்...

என்னை
உனக்குள் தொலைக்கிறேன்...

இரும்பல்ல என் இதயம்
உன்னை நினைக்காமல் இருக்க...

காதல் வளர்வதற்கு ஏற்ற
மண்தான் என் இதயம்...

உன்னையும்
என் காதலையும்...

என் மனம் என்றும்
வெறுத்தது இல்லை...

உன்னுடைய நினைவுகளால்
வலிகளும் வார்த்தைகளும்...

முளைத்துக்கொண்டே இருக்கிறது...

உன் கண்களை
பார்த்து நேசித்தேன்...

நீயோ கண்களை பார்த்து
சொல்லவில்லை மறந்துவிடு என்று...

நீ மண்ணை பார்த்து
சொன்னதின் காரணம் என்னடி...

நான் மண்ணுக்குள்
சென்றால் இன்பமோ உனக்கு...

என் முகம் பார்த்து
சொல்லிவிடு உன் சம்மதத்தை.....


***முதல்பூ .பெ .மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (9-May-22, 8:59 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 225

மேலே