தாம்பூலத்தில் – இன்னவை விலக்க வேண்டுமெனல் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நீற்றிலையும் மூக்கு நெடிய நரம்புடனே
தீற்றும் புறவுரியுந் தின்றக்கால் - மாற்றலரை
வெல்லப்போர் செய்யும் விறனெடுமா லாயிடினுஞ்
செல்லப்போய் நிற்குந் திரு

பதார்த்த குண சிந்தாமணி

வெற்றிலையின் நீண்ட நுனி, காம்பு, நீண்ட நரம்பு இவற்றை ஒழித்து தாம்பூலந் தரிக்க வேண்டும்; அவ்வாறு செய்யாவிடில் போருக்குச் செல்லினும், திருமகள் அவனிடம் தங்க மாட்டாள் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-May-22, 7:49 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே