அம்மா அம்மா

அம்மா! அம்மா!!
-------------

பணவேட்டைப்
பதவி ஆட்டத்தில்
பெற்றத் தாய்க்குப்
போக்கிடம் இல்லை !

எல்லாம் முடித்து வந்தால்
எங்கோ அவளைக் காணவில்லை !

காலமெலாம் அம்மாவைக்
கண்காணிப்பில் வைத்திருப்போர்
கடவுள்களே!

ஏனையோர் யாவருமே
இழிபிறப்பின் எச்சங்களே !

சாலையோரம்
சாப்பிட ஏங்கும்
அம்மாக்களின் வயிறுகள்
அன்பினால் நிறையட்டும்!

முதியோர் இல்லங்கள் மூடப்படும்
அந்நாளே

அம்மாக்கள் தினமென
ஆர்ப்பரிக்கும் நாளென்போம் !!!

அம்மாக்கள் தின நல்வாழ்த்துகள்.

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (8-May-22, 9:59 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 196

மேலே