நாலு அன்னையும் நாலு முத்தங்களும்
முதல் முத்தமிட்ட
தன் உதிரத்தை பகிர்ந்தவள்
முதல் அன்னை!!
இரண்டாம் முத்தமிட்ட
தாயின் மதுரத்தை பகிர்ந்தவள்
இரண்டாம் அன்னை!!
மூன்றாம் முத்தமிடும்
தன் வாழ்க்கையை பகிர்பவள்
மூன்றாம் அன்னை!!
நான்காம் முத்தமிடும்
தன் புன்னகையை பகிர்பவள்
நான்காம் அன்னை!!
-கவி குழந்தை
சா. உ. சரவணன்