துத்திப் பூ - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

துத்தி மலரைநிதந் துய்க்கின்ற பேர்களுக்கு
மெத்தவிந்து வும்பெருகும் மெய்குளிருஞ் - சத்தியமே
வாயால் விழும்இரத்தம் மாறும் இருமலறும்
தேயா மதிமுகத்தாய் செப்பு

- பதார்த்த குண சிந்தாமணி

இரத்த வாந்தி, காசம், இவற்றை நீக்கி சுக்கில விருத்தியையும் உடல் குளிர்ச்சியையுமுண்டாக்கும் பண்பு துத்திப் பூவிற்குண்டு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-May-22, 10:46 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே