பயற்றங்காய் - நேரிசை வெண்பா

பயற்றங்காய்
நேரிசை வெண்பா
(அ’ய்’ ப’ய்’ – ய் இடையின ஆசு)

ஐயம் அகலும் அரோசிகெடுந் தீபனமாம்
பையுதிர வாய்வும் பறக்குமென்பார் - செய்யும்
நயத்த அவுஷதமும் நாசம் அடையும்
பயற்றங்காய் தன்னையுண்டு பார்

- பதார்த்த குண சிந்தாமணி

இது மருந்தை முறிக்கும்; கபம், சுவையின்மை, இரத்த வாந்தி, குன்மம் இவை நீங்கும்; பசியை உண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-May-22, 9:08 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே