ஆற்றுத் தும்மட்டிக்காய் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கிடையெங்கே சோம்பலெங்கே கேடுறச்செய் வாதக்
கடையெங்கே யாற்றுக் கலிங்க - மடைதிறக்கின்
அண்டை யடைசலெங்கே யாயிழையார் சூதகத்தின்
உண்டை யுடைசலெங்கே யோது
- பதார்த்த குண சிந்தாமணி
இத்தும்மட்டிக்காயால் கீல் பிடிப்பால் நடையின்றியிருத்தல், சோர்தல், வாத நோய், கருப்பை, ஆமம், சத்த குன்மக்கட்டி இவை நீங்கும்