போடி வாடி அல்ல

உலகத் தமிழர் யாரும்
தம் பிள்ளைக்குச் சூட்டாத
இந்திப் பெயரைத்
தவமிருந்து பெற்ற
எங்கள் மகனுக்குப் சூட்ட
எண்ணியிருந்த நாங்கள்
எங்கள் குடும்ப சோதிடர்
இஷ்டலிங்க சாஸ்திரிகளை
கலந்து ஆலோசித்தோம்.
பையன் பிறந்த நேரம் ராசிப்படி
தமிழர் யாரும் தம் பிள்ளைக்குச்
சூட்டாத இந்திப் பெயரைச்
சூட்டுவதே குடும்பத்திற்கு
நல்லது என்றார்.
"சொல்லுங்கள் சுவாமி" என்றோம்.
பையன் ராசிக்கு 'போடி' எனும்
அர்த்தமில்லாத இந்திப் பெயரே
பொருத்தமாக இருக்கு மென்றார்.
பெண் பிள்ளைகளை "வாடி போடி"யென்று
அழைப்பது தமிழரின் வழக்கம்.
எங்கள் அருமை மகனையும்
ஊரிலுள்ள அனைவரும்
பின்னாளில் பள்ளியிலும்
"போடி" என்றே கூப்பிடுவார்.
மாணவர் சிலர் எம் செல்ல மகனை
"போடி வாடி" என்று கிண்டல் செய்தால்
அழுவானே எங்கள் மகன்
எப்படி ஆறுதலை அவனுக்குச் சொல்வது?
"'போடி'ச் செல்லமே இந்திப் பெயர் மோகம்
தமிழர்களின் தீராத தாகம். உன் பெயர்
இந்திப் பெயர் என்று சொன்னால் போதும்
கிண்டல் செய்வோரும் "ஸ்வீட் நேம்" என்று
வாயை மூடிக் கொள்வார்" பிறகென்ன?
####################################
Pody - meaningless Hindi masculine name. kanni raasi.