நந்தியாவட்டப் பூ - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
காசம் படலங் கரும்பாவைத் தோஷமெனப்
பேசுவிழி நோய்க(ள்)தமைப் பேர்ப்பதன்றி - ஓசைதரு
தந்திபோ லேதெறித்துச் சாருமண்டை நோயகற்றும்
நந்தியா வட்டப்பூ நன்று
- பதார்த்த குண சிந்தாமணி
கண்காசம், படலம், லிங்கநாத தோடங்கள், தலை நோய் ஆகியவற்றை நந்தியாவட்டப் பூ நீக்கும்