படிங்க, முடிஞ்சா சிரிங்க

கே: மின் விளக்கு எந்த தத்துவத்தில் எரிகிறது?
ப: விளக்கு(வது) கடினம்.

கே: நீ சொல்வதெல்லாம் உண்மையா?
ப: நான் சொல்லாததெல்லாம் பொய் அல்ல.

கே: நீ ஏன் உன் பக்கத்து வீட்டுக்காரர் பல்லை உடைத்தாய்?
ப: அவர் என் மனைவியை பார்க்கும்போதெல்லாம் பல்லை காட்டினார்.

கே: காப்பியில் சூடு இருக்கிறது ஆனால் சொரணை இல்லையே?
ப: உங்கள் தலையில் கூட முடி இருக்கிறது ஆனால் மூளை இல்லையே.

கே: ஏங்க, தலை முடி எடுத்து விட்டு வரேன்னு சொல்லிட்டு, இப்படி மீசையையும் மழிச்சிட்டு வந்து நிக்கரீங்களே?
ப: தலை முடி வெட்டிக் கொண்டால், மீசை மழிப்பு இலவசம் என்று சலூனில் விளம்பரம் இருந்தது.

கே: நூறிலிருந்து பத்தை க(அ)ழித்தால் மீதி எவ்வளவு?
ப: பூஜ்ஜியம்

கே: உனக்கு கல்யாணம் ஆகி, பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னமும் உனக்கு ஒரு குழந்தை இல்லையே. ஏன்?
ப: உனக்கும் தான் கல்யாணம் ஆகி, இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் மூளை இல்லையே.

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (11-May-22, 9:08 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 288

மேலே