மயக்கம்..!!
மாமரத்து குயிலு ஒண்ணு
மயங்குதடி என்னை கண்டு..!!
பூமரத்து நிழல் ஒண்ணு
பொங்குதடி ஆசை கொண்டு..!!
மலர் விழும் மாலையில்
மங்கைகள் ஏராளமடி..!!
மானே தேனே
மனசுக்குள் பூத்தது நீயடி..!!
மாலை சூடும் வேளை வரை
காத்திருக்க வேண்டுமடி..!!
மன்னவன் உனக்கு தானாடி
என் மரிக்கொழுந்து வாசமே..!!
மனம் முழுவதும் நீயடி
உன்னை வெல்ல இங்கு யாரடி..!!