பெண்ணென்றால் விண்ணும் நிறையும் – அறநெறிச்சாரம் 111

நேரிசை வெண்பா

வேட்டவாய்க் கேட்பர் விரைந்தோடி ஞாலத்தார்
கேட்டைக் கிழத்தியைப் பாடுங்கால் - கோட்டில்லா
ஓதுமின் ஓதி அடங்குமின் என்னுஞ்சொல்
கூதற்குக் கூதிர் அனைத்து 111

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

மூதேவி போன்ற ஒருத்தியைப் பாடுமிடத்து உலகத்தவர் விரைந்து சென்று அதனை மிக விரும்பிக் கேட்பர்,

மாறுபாடில்லாத அற நூல்களைக் கற்பீர்களாக; கற்று அவற்றிற்குத் தகவொழுகுங்கள் என்று பெரியோர் கூறுஞ்சொல், முன்னமே குளிரால் நடுங்கிய உடலினிடத்தே வீசிய குளிர்காற்றை யொக்கும் வெறுக்கப்படும்.

குறிப்பு: கிழத்தியைப் பாடுங்கால்: பெண்ணொருத்தி பாடுமிடத்து எனலாம்.

கோட்டில்லா (தன) வினையாலணையும் பெயர்.

கூதற்கு; வேற்றுமை மயக்கம். விண்-ஆகாயம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-May-22, 7:57 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

சிறந்த கட்டுரைகள்

மேலே