அவாப்பெய்த பண்டியை ஊர்கின்ற பாகன் - அறநெறிச்சாரம் 112

இன்னிசை வெண்பா

இறையிறை யின்சந்தித் தென்பொடூன் சார்த்தி
முறையின் நரம்பெங்கும் யாத்து - நிறைய
அவாப்பெய்த பண்டியை ஊர்கின்ற பாகன்
புகாச்சுருக்கில் பூட்டா விடும். 112

– அறநெறிச் சாரம்

பொருளுரை:

உறுப்புக்களின் மூட்டு வாய்களை ஒன்றோடொன்று பொருத்தி, எலும்போடு தசையை இணைத்து முறையே நரம்பால் எல்லாவிடங்களையும் உறுதியாகக் கட்டி, ஆசையாகிய சரக்கை நிறைய ஏற்றிய உடலாகிய வண்டியை ஏறிச் செலுத்துகின்ற உயிராகிய பாகன் ஆகாரத்தைக் குறைத்தால் அதனைச் செலுத்துதலை விட்டு நீங்குவான்.

குறிப்பு: ''அன்ன மொடுங்கினால் ஐந்து மொடுங்கும்'' பழமொழி.

உணவு குறைந்தால் மெய். வாய். கண், மூக்கு, செவி ஆகிய ஐந்தும் ஒடுங்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-May-22, 8:05 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 6

மேலே