மன்மதனின் காம அம்பு

மன்மதனின் காம அம்பு


நேரிசை வெண்பா
சொல்லித் தெரிவதில்லை பார்மன் மதக்கலை
சில்லறைகள் தொல்லை தினம்தினம் -- வில்லில்
மழுங்கிய மொக்கையம் பாகத் தொடுக்க
தழும்பே றியயாக்கை காண்காதல் என்பது இருமனம் ஈர்க்கும் அனிச்சை. அதை கிறுக்கி
கொடுக்க படிக்க இன்பம் வருமோ. ஆகையால் உண்மைக்
காதலை அறிய பாரதி சொன்னதுபோல் ஆகையால்
காதல செய்வீர். காமம் தலைக்கேறியது கிறுக்குபவனுக்கா
அல்லது படிப்பவனுக்கா புரியவில்லை. கிறுக்கும் காதல
மொக்கை அம்புகளால் உடலில் குத்தி தழும்பேறி யதுதான்
மிச்சம். மாயக்காம அம்பை தொடுக்காதீர்.

எழுதியவர் : பழனி ராஜன் (20-May-22, 8:46 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 89

மேலே