தேடல்கள் அர்த்தமற்றது

காதலுக்கு கண்கள் இல்லை என்பார்கள்
ஏன் தெரியுமா? என் காதல் சில சமயம்
உனக்கு தெரிவதில்லை.

வேலைப்பளு பல உண்டு, அவளுக்கு
என என்னதான் என் மனம் சமாதானம்
கூறினாலும் ஏற்க மறுக்கும் 32 வயது
குழந்தை தான் நான் உனக்கு.

முன்பெல்லாம் எல்லாமே கேட்டு கேட்டு
கிடைக்கும் எனக்கு கேட்காமல் கிடைப்பது
வலிகள் மட்டுமே. இப்போது அந்நிலை மாறி
உன் அன்பு எனக்கு எல்லைகளின்றி கிடைப்பது
வாழும் பொழுது சொர்க்கத்தை அனுபவிக்கும்
மகிழ்ச்சி எனக்கு.

இருந்தபோதிலும் சில சமயம்
பல காரணங்களால் உன் கவனம் என் மீது
இல்லாத பொழுது வாழும் பொழுது நரகத்தையும்
அனுபவிக்கும் வேதனை தான் எனக்கு.

இது ஒரு
சாமானியனின் அரிய நிலை.
என்னுடைய தேடலுக்கும் ஆவலுக்கும் நீயே விடை.
என்பதால் உன் விடைகள் தாமதமாகும் போது
என் தேடல்கள் அர்த்தமற்றதாக ஆகிவிடுகிறது.

எழுதியவர் : தமிழ் அன்பு நேசன் (20-May-22, 4:31 pm)
சேர்த்தது : Sikkandar
பார்வை : 99

மேலே