ஆசை

பிறர் வார்தைகள் எனக்கு பிடித்த மாதிரி இருக்க ஆசை
பிறர் மௌனங்கள் நான் விரும்பும் போது உடைய ஆசை
பிறர் சிந்தனை எனக்கு ஏற்றார் போல் இருக்க ஆசை
பிறர் செயல்பாடுகள் என் எண்ணத்திற்க்கு ஒத்துப் போக ஆசை
பிறரின் என் மீதான காதல் என் ‌காதலை விட ஒரு படி மேலே இருக்க ஆசை
பிறர் என்னை எப்போதும் புரிந்து கொள்ள வேண்டும் என்று‌ ஆசை
பிறர் என்னை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை
பிறர் என் கோபத்தை சகித்து கொள்ள வேண்டும் என்று ஆசை
பிறர் என் சூழ்நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசை
நான் மேற்க்கூறிய யாவையும் பிறர் என்னிடம் எதிர்பார்க்க கூடாது என்று ஆசை
இப்படி என் உள்ளத்தில் ஒளிந்து இருக்கும் சுயநலம் என்ற சொல்லுக்கு உதடுகள் கூறும் அர்த்தங்கள் தான் ஆசை
மனிதனின் எல்லா மகிழ்ச்சியும் பிறர் சார்ந்து இருப்பதே அவன் மகிழ்விற்க்கு முடிவு கட்டும் மணியின் ஓசை..
தன்னை நேசிக்காத ஒவ்வொருவனும் பிறரின் தேடலில் பலி ஆக வேண்டும்
என்பதே இப் பிரபஞ்சத்தின் ஆசை ...

எழுதியவர் : தமிழ் அன்பு நேசன் (20-May-22, 4:35 pm)
சேர்த்தது : Sikkandar
Tanglish : aasai
பார்வை : 139

மேலே