முழுமதியாய் உன் முகம் கண்டேன் 555

***முழுமதியாய் உன் முகம் கண்டேன் 555 ***


அழகே...


மாலைநேர
சூரியனின் வெப்பத்தில்...

உன் காய்ந்த உதட்டு
ரேகைகளை கண்டேன்...

பிறை நிலவின்
வெளிச்சத்தில்...

முழு மதியாய்
உன் முகம் கண்டேன்...

மொட்டு விரித்த
மலரில் எல்லாம்...

உன் பூ
முக
ம் கண்டேன்...

என் வீட்டு கண்ணாடியில்
உன் முழு உருவம் கண்டேன்...

என்
சாலையோர பயணத்
தில்...

நீ நடந்து செல்லும்
அழகை கண்டேன்...

உணவு விடுதியில் நீ சிந்தாமல்
உண்ணும் அழகை ரசி
த்தேன்...

பேருந்து பயணத்தில்...

நீ இயற்கையை
ரசிக்கும் அழகை கண்டேன்...

நீ தலையசைக்கும்
போது நடனமாடும்...

காதோர ஜிமிக்கியை
பறிக்க ஆசை கொண்டேன்...

உன் கருவிழியில்

என்னை கண்டு...

நான் என்
சுவாசத்தை இழந்தேன்...

நீ என் சுவாசமாக இருப்பாய்
என்ற நம்பிக்கையில்.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (20-May-22, 4:37 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 232

மேலே