மகிலன்

மகிலன்... நீ
கௌதம்... வைஷ்ணவிக்கு
வரம் என வந்த புதல்வன்...

பிரியமான மகிலன்...
பிறரை வெல்ல வேண்டும்
என்பதில்லை நீ...
அழகிய திட்டமிடலில்
அற்புத நட்புக்களம் கொண்டு
உன்னை நீயே வென்று கொண்டிரு..

வரலாற்றில் இடம் பிடிக்க வாழ
வேண்டும் என்பதில்லை... உன்னை
உனக்குப் பிடிக்க வாழ்ந்திரு...

ஒரு புதிய நூறாண்டு
உனதானது... அது
இதுவரை யாரும் காணாதது...
அன்புத் தென்றல் வீசும்
அழகிய நந்தவனம் அது...

கோடை வெப்பம் தீர இதமான
குளிர் தரும் கொடைக்கானல்...
குவியும் மேகங்களின்
குதூகல வாழ்த்துகளில்...
பூத்துக் குலுங்கும் பூக்களின்
மயக்கும் வாசத்தில்...

அழகர்... ராமகிருஷ்ணன்
அற்புத தாத்தாக்கள்...
மீனாட்சி... விஜயஸ்ரீ
அருமை ஆச்சிகள்...
அவர்களின் அதீத அன்பினில்...

வென்று எடுக்க உனக்கு
ஒரு உலகு போதாது...
வாழ்வின் பயணங்களில்
வசந்தங்கள் வரமாகும்...
வளங்கள் உனக்கு வசமாகும்...

அழகன்... அன்பன்..
ஆதவன்.. ஆனந்தன்.. இனியன்..
வசந்தன்... வசீகரன்... அழகிய
கேசன்.. நேசன்.. பேரன்.. மகிலன்..
உலகம் உந்தன் கையில்...
வசந்த வாழ்த்துகள்... இனிய
பிறந்தநாள் வாழ்த்துகள்...

அன்புடன்...
ஆர்.சுந்தரராஜன்.
சாந்தி சுந்தரராஜன்.
💐🌹👏👍😀🎂🍫❤

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (20-May-22, 9:44 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 180

மேலே