சுற்றும் பூமியில் சுற்றாத பூமி

பூக்கள் அருகில் இருக்க
வாசம் நிறைய இருக்கும்...
நட்புக்களின் சுகந்தம்
கிரகங்கள் தாண்டியும்
நேசம் தரும்...

சுற்றும் பூமியில்
சுற்றாத பூமி ஒன்று உண்டு..
அது தோழமை பாராட்டும்
நட்பின் நந்தவன தேசம்...

அதில் கறுப்பு நிறம்
வெள்ளை உள்ளம் கொண்ட
அழகன்.. அன்பன்...
ஆதவன்.. ஆனந்தன்
வசந்தன்.. வசீகரன்.. இனியன்
அழகிய கேசன்.. நேசன்.. அவன்
நண்பன் அதிவீரபாண்டியன்..

பருத்திச்செடி மிளகாய்ச் செடி..
வளர்த்துப் பழகிய இவனுக்கு..
தான் பணியாற்றும் நிறுவனம்
வளர்க்கவும் நன்கு தெரியும்..

பூச்செடி வளர்த்து பூப்பறிக்கத்
தெரிந்த இவனுக்கு.. தேசத்தின்
நிலக்கரி நிர்வாகம் நன்கு புரியும்..

பள்ளிகளோடு கிராமத்து
வீதிகளிலும் பாடம் பயின்ற
அதிவீரபாண்டியனுக்கு
சவால்களைச் சமாளிப்பது
சோன்பப்டி சுவைப்பது போன்றது.

ஊருக்கு இவன் இமயம்...
நட்புக்கு நல் இதயம்...
இவனுக்கு வானமும் வசப்படும்..
வசந்தங்கள் என்றும் உறவாடும்..

சாதித்ததை விட
சாதிக்கப் போவது அதிகமாய்
அமைய.. அதிவீரபாண்டியன்
உனக்கு வசந்த வாழ்த்துகள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
👍🌹😀💐🍫

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (20-May-22, 9:34 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 350

மேலே