தி பெஸ்ட் வெர்ஷன் ஆப் ஹெர்

லதா கிறிஸ்டி...
உழைத்துக் கொண்டே இருக்கும்
இவரிடம் சமூகத்திற்கு சொல்ல
நல்ல கருத்துகள்
உதித்துக் கொண்டே இருக்கும்...

டாக்டர் லதா கிறிஸ்டி... இவர்
இறைவனின் அற்புத சிருஷ்டி...
ஆராய்ச்சி கட்டுரைகளை
வசப்படுத்தும் வசந்தி..
மாணவர்களின் கல்வி ஆர்வம்
வளர வழி சொல்லும் சுகந்தி..

இவர் எழுதிய புத்தகங்கள்
தரும் வெளிச்சம்...
கிழக்கு திசை உதய ஜாதி...
அது சமூகம் மகிழ
சொல்லும் பல சேதி...

ஒளிரத் துடிக்கும் தீபங்கள்
எனும் புத்தகம்.. அதில் கிறிஸ்டி
முட்களைப் பூக்களாய் மாற்றும்
சமூக விவசாயி...

பியான்ட் தி பவுண்டரிஸ் ஆப்
சயின்ஸ் எனும் புத்தகம்.. அதில்
ஆகாயத்திற்கு அப்பால்
அதிசயங்கள் தேடும்
அறிவியல் விஞ்ஞானி...

லதா கிறிஸ்டி விருது
முத்துக்களைக் கோர்த்துக்
கொண்டே இருக்கிறார்...
சாதனை மைல் கற்களை
கடந்து கொண்டே இருக்கிறார்...

ஆங்கிலத்தில்...
ஷி இஸ் எவர் தி பெஸ்ட்
வெர்ஷன் ஆப் ஹெர்...
தமிழில்...
அவர் எப்போதும் அவருடைய
சிறந்த பதிப்பு...

விஞ்ஞானம்... சமூக ஞானம்...
இரண்டும் இரு கண்களென
வாழும் டாக்டர் லதா கிறிஸ்டிக்கு
வானம் வசப்படட்டும்...
வளங்கள் வரமாகட்டும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
👍😃👏🌹💐🌺🍫

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (22-May-22, 5:39 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 139

மேலே