தந்தையர் தினம்
அப்பா....
உன் வியர்வையில் வித்திட்டாய்
என் உயர்வினில் மகிழ்ந்திட்டாய்....
உன் துயரத்தை மறைத்துவிட்டு
என் தோழனாய் உடனிருந்தாய்....
உன் ஏக்கத்தை எரியிலூட்டி
என் ஏற்றத்திற்கு ஏணியானாய்....
உன் பாசத்தை புறந்தள்ளி
என்னை பார் புகழச் செய்தாய்....
உன் கண்டிப்பான இதயத்தில்
என் கனவுகள் மெய்பட கண்டாய்....
உன் உறங்காத விழிகளில்
என் சிறப்பான வாழ்வை கண்டாய்...
சரித்திரத்தின் நாயகனாக
தியாகத்தின் பிறப்பிடமாக
தரணி போற்றும் தலைவனாக
தன்னிகரற்ற தகப்பனாக
என்றும் வாழ்வாய் தெய்வமாக......
- சாந்தீஸ்வரி ராஜாங்கம்