மகள்
மகள்
அன்புக்கான வித்து நீ
அசைக்க முடியாத சொத்து நீ
ஆழ்கடலில் கிடைக்காத முத்து நீ
ஆண்டவன் அனுப்பிய மகத்துவம் நீ.....
தாயின் தாலாட்டில் வளர்ந்து
தந்தையின் சீராட்டில் சிறந்து
தமையனின் பாராட்டில் மகிழ்ந்து
தன்னலமற்ற பாசத்தை பகிர்ந்து
மகள் எனும் மகுடத்தை சூடினாய்.....
தாய்க்கு சேயாக
தந்தைக்கு தாயாக
கதம்பத்தின் வாசமாக
குடும்பத்தின் நேசமாக
குலவிளக்கின் தோற்றமாக
பலர் வாழ்வில் ஒளியாக
என்றும் சிறந்தாய் மகளாக........