மகளிர் மட்டும்
பெண்
உடலில் மென்மையாக
உறுதியில் வன்மையாக
சிந்தனையில் உயர்வாக
செயலால் சிறப்பானவள்......
விண்ணில் மின்னும் நிலவாக
மண்ணில் உதித்த தேவதையாக
மனித இனத்தின் பெருமையாக
மகிழ்விப்பாள் என்றும் இனிமையாக.....
வலிகள் நிறைந்த வாழ்க்கையில்
வழிகளை தேடி அலைபவள்....
சிறகை இழந்த நிலையிலும்
சிந்தித்து விண்ணில் பறப்பவள்....
முட்கள் சூழ்ந்த பாதையிலும்
முடிவில்லாமல் உழைப்பவள்.....
கரை தெரியாத கடல் அலையில்
கட்டுமரமாய் மிதப்பவள்.....
நிழல் தெரியாத இருளிலும்
நிலைகுலையா உறுதி கொண்டவள்....
கானல் நீராக அவள் கனவுகள்
மணல் கயிறாக அவள் நினைவுகள் பாலைவன பசுமையாய் அவள் உணர்வுகள்...
காலைநேர பனித்துளியாக அவள் உணர்ச்சிகள்....
காட்டாற்று வெள்ளமாக அவள் உள்ளம்....
கற்பனையில் கவிதை பாடும் அவள் நெஞ்சம்....
பொக்கிஷங்களை உரமாக்கி
போராட்டங்களை போர்க்களமாக்கி
சரிவுகளை சக்தியாக்கி
சாதனைகளை சரித்திரமாக்குவாள் பெண்!!!!!!!!!!
சாந்தீஸ்வரி ராஜாங்கம்