எது ஞானம்

வேதத்தின் கருத்தெல்லாம் மறைந்திருக்கும்
சுத்தப் பாலில் வெண்ணையைப் போல
இப்படி மறைந்திருப்பதால் அன்றோ
வேதத்தை மறையென்பார் இலக்கிய அறிஞரும்
வேதத்தின் உட்பொருள் உணர்ந்திட நல்லதோர்
குருவை நாடி அவர் பாதத்திலிருந்து கற்று
இதை அறிந்திடலாம் இப்படித்தான் நமது
புறக்கண்ணிற்கு தெரியாத மறையோனை அறியவும்
குருவே துணை புரிவார் அதனால்
அறிவாய் மனமே குருவின்றி பெற்றக்கல்வி
வெறும் கல்வி அது ஒருபோதும்
ஞானமாகாது திண்ணம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-May-22, 2:06 pm)
Tanglish : ethu nanam
பார்வை : 51

மேலே