தியாகம்
கட்டிய நூல்கண்டு கொஞ்சம் கொஞ்சமாய்த்
தேய்ந்துவர நெசவாளி தறியில் மும்முரமாய்
காலசைக்க சீலைத் தயாராகி வந்திட
நூல்கண்டும் காலியானது நிர்வாணமானது
தன் காதலிக்கு தானே தயாரித்த
சீலை இப்போது முழுவதுமாய் அவன்கைகளில்
பாவம் நூற்கண்டு ஆடையில்லா பெண்போலானதே
ஒரு தியாகம் மற்றோண்டிற்கு ஆரணம்
வாழ்க்கைக்கு இது ஓர்பாடம்