தனிமை
ஒற்றைச் சாலை
அது..
நான் மட்டும்
ஒற்றையாய்...
ஞாபகங்கள்
கிளறி என்னோடு
பேசும்..
சில சமயம்
காற்றாடி சத்தமும்
சாளரக் கம்பியில்
எட்டிப் பார்க்கும்
காற்றும்
நினைவுகளை
கலைத்துப் போடும்!
அதிலும் உன்
ஞாபகங்கள்தான்
நிறைய..
தூரத்து குயிலின்
பாட்டில் ஏதோ
ஒரு சோகம் கேட்கும்!
பல நேரங்களில்
நான்
தனிமையோடுதான்
பேசிக் கொண்டிருக்கிறேன்..
உயிரோடு இருப்பதும் உன் நினைவோடு இருப்பதும்..
எனக்கு
நானே கொடுத்த
சிறைவாசம்
இந்த தனிமை!