மின்னல் விழிகள் இரண்டால் மேவுங் காதல் - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா 5 காய்)
(1, 4 சீர்களில் மோனை)
கன்னக் குழிவால் என்னில்
..கனவுத் திரையை விரிக்கின்றாய்!
மின்னல் விழிகள் இரண்டால்
..மேவுங் காதல் தெளிக்கின்றாய்!
மின்னும் கூந்தல் தவழ
..மிளிரும் வான்வில் விரிக்கின்றாய்!
புன்ன கையை இதழில்
போர்மு ரசாகக் கொட்டுகின்றாய்!
- வ.க.கன்னியப்பன்
கருத்து: திரு.கவின் சாரலன்