மறுபாகம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பாகமொடட் டிக்குளிர்ந்த பாணியிர சாயனநல்
வேகவிலே கங்குடிநீர் மெய்ச்சுரசம் - ஏகுமிரா
மீந்தவெஞ்ச னாதிகளை மீளவொருக் காலட்டி
மாந்தநஞ்சம் வேறிருக்கு மாம்

- பதார்த்த குண சிந்தாமணி

பக்குவமாகக் காய்ச்சி ஆறிய வெந்நீர், இரசாயனம், வீரியமுள்ள இலேகியம், கஷாயம், தனியே இடித்துப் பிழிந்த சுரசம், முன் இரவில் மீந்த பதார்த்தம் இவற்றை மறுபடி சுட வைத்து உண்பது விடத்தை உண்பதற்கு ஒப்பாகும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jun-22, 5:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே