சோர்வேதும் இல்லாத சுடர்விழியாள் - அறுசீர் ஆசிரிய விருத்தம்
சோர்வேதும் இல்லாத சுடர்விழியாள்!
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(1, 5 சீர்களில் மோனை)
கார்கூந்தல் கலைந்தாடும் மாலைதனில்
..காத(ல்)ராகம் கனிந்த மௌனம்;
நேர்கொண்ட பார்வையினில் விழியசைத்து
..நீஎழுப்பும் நினைவும் என்ன?
சோர்வேதும் இல்லாத சுடர்விழியால்
..தொடரம்புச் சுடராய் வென்றாய்;
போர்செய்யும் ஆற்றலில்லை சமாதான
..ஒப்பந்தம் புரிவோம் இன்றே!
- வ.க.கன்னியப்பன்