தண்டனை
தண்டனை.
என்னை கேளாமல்,
என் இதயத்தில்
அமர்ந்து கொண்டாள்!
அமர்ந்தவளை நான்
போ என்று சொல்ல முடியவில்லை,
அது ஏன் என்று எனக்கு
புரியவில்லை? இறைவனை நான் கேட்டபோது,
இது நான் உனக்கு
இட்ட தண்டனை
என்றான்.
நான் செய்த பாவம்
என்ன என்று கேட்டேன்!
அவனோ மௌனியாகி
கல்லாய் அமர்ந்து
கொண்டான்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.